» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று: மத்திய சுகாதாரத்துறை தகவல்

வியாழன் 2, டிசம்பர் 2021 4:44:56 PM (IST)

இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

ஒமைக்ரான் கரோனா தொற்று உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பிருந்த கரோனாவை விட இதன் தீவிர தன்மை அதிகமாக இருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது. எனவே, பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால், "தடுப்பூசியின் 2 வது தவணை அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஐரோப்பா பிராந்தியத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, உலகளாவிய கரோனா பாதிப்பில் 70 சதவிகிதம் இப்பகுதியில் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டும் கர்நாடகாவில் பதிவாகியுள்ளது" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory