» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் பிட்காயினை அங்கீகரிக்க மாட்டோம் - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

செவ்வாய் 30, நவம்பர் 2021 4:15:28 PM (IST)

இந்தியாவில் பிட்காயினை பணமாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ‘பிட்காயின்’ எனப்படும் ஆன்லைன் நாணயம் அங்கீகரிக்கப்படுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘பிட்காயினை பணமாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை. பிட்காயின் பரிமாற்றம் குறித்த தரவுகளையும் மத்திய அரசு சேகரிக்கவில்லை’’ என்றார்.
 
அவர் மேலும் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம்வரை மத்திய அரசு மூலதன செலவாக ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கலால் வரியை குறைத்துள்ளோம். விலையை குறைக்க மற்றொரு நடவடிக்கையாக, கையிருப்பில் இருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க இந்தியா சம்மதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory