» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா உயிரிழப்புகள் தொடர்பாக அரசு தவறான தகவல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

திங்கள் 29, நவம்பர் 2021 10:51:20 AM (IST)

கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பலி தொடர்பான அரசின் எண்ணிக்கை தவறானது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், "கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பலி தொடர்பான அரசின் எண்ணிக்கை தவறானது. பலியான ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு தர வேண்டும். கரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் குடும்ப கதைகள் உண்மையானவை. அவர்களின் வலி, துன்பம் உண்மை. ஆனால் அரசின் புள்ளி விவரம் தவறு. அரசு உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும்” என கூறி உள்ளார்.

கரோனா கால அனுபவங்களை சில குடும்பங்கள் சொல்லும் வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ராகுல் காந்தி, "குஜராத் மாதிரி பற்றி நிறைய விவாதிக்கப்படுகிறது. ஆனால் நாம் பேசிய அனைத்து குடும்பங்களுமே கரோனா காலத்தில் தாங்கள் உணவு, படுக்கை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் இல்லாமல் அவதியுற்றதாக தெரிவித்தன, கரோனாவால் குஜராத்தில் மட்டுமே 3 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால் அந்த மாநில அரசு 10 ஆயிரம் பேர் மட்டுமே கரோனாவால் இறந்ததாக கூறுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory