» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தடுப்பூசி செலுத்தி கொண்ட 66 மாணவர்களுக்கு கரோனா : கர்நாடகத்தில் பரபரப்பு

வியாழன் 25, நவம்பர் 2021 8:11:08 PM (IST)

கர்நாடகத்தில் தடுப்பூசி செலுத்தி செலுத்து கொண்ட 66 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது

கர்நாடக தார்வாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சிலருக்கு இதனிடையே, அந்த கல்லூரி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த கல்லூரியில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதன் பின்னரே சில மாணவர்களிக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கல்லூரியில் படிக்கும் 400 மாணவர்களில் 300 பேர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதில், 66 மாணவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 66 மாணவர்களும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கல்லூரியில் உள்ள 2 விடுதிகளுக்குச் சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதால் அவர்களுக்குத் தீவிர கரோனா பாதிப்பு இல்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தேவைப்பட்டால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் ஒரே கல்லூரியில் தடுப்பூசி செலுத்து கொண்ட 66 மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory