» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சர்வதேச விமான சேவை இந்தாண்டு இறுதிக்குள் இயல்பு நிலைக்கு திரும்பும்: மத்திய அரசு

புதன் 24, நவம்பர் 2021 3:29:30 PM (IST)

சர்வதேச விமான சேவைகள் இந்தாண்டு இறுதிக்குள், இயல்பு நிலைக்கு திரும்பும் என விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ் பன்சால் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு மார்ச் மாதம், நாடு முழுவதும் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், மீட்பு சேவை மற்றும் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. கரோனா பாதிப்பு குறைந்து தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல், பல்வேறு நாடுகளுடனும் 'ஏர் பபுள்' ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 

கிட்டத்தட்ட 25 நாடுகளுடன், இந்தியா இதுபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 'ஏர் பபுள்' ஏற்பாட்டின் அடிப்படையில், சில கட்டுப்பாடுகளுடன் இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கு மத்தியில், சர்வதேச விமான சேவையை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கான வழிமுறையை அரசு மேற்கொண்டு வருகிறது என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் தெரிவித்தார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இயல்புநிலைக்கு திரும்புவதில் அரசு கவனம் செலுத்திவரும் அதே சமயத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பல ஐரோப்பிய நாடுகளில் அச்சப்படக் கூடிய அளவில் கரோனா அதிகரித்துள்ளது.

உலகில் சிவில் ஏவியேஷன் துறையில் எங்களின் இடத்தை மீண்டும் பெறுவதற்கும், இந்தியாவை விமான போக்குவரத்து துறை மையமாக உருவாக்குவதற்கும், விமான சேவையை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் நான் முற்றிலும் ஆதரவாக இருக்கிறேன். அந்த இடத்திற்கு நாம் வருவோம். என்னை நம்புங்கள். நான் உங்கள் பக்கம் இருக்கிறேன். பாதுகாப்பான சூழலில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வேலை செய்வோம்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory