» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏர்டெல் ப்ரிபெய்ட் கட்டணம் 25 சதவீதம் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

திங்கள் 22, நவம்பர் 2021 5:18:39 PM (IST)

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய கட்டண உயர்வு அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்தியாவில் பெரிய வலைப்பின்னலைக் கொண்டிருந்த  ஏர்டெல் சமீப காலமாக தன் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. ஜியோவின் வருகை ஒரு காரணம் எனச் சொல்லப்பட்டாலும் அதன் ப்ரிபெய்டு கட்டணங்களும் அதன் இழப்பிற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வருகிற நவ.26-ஆம் தேதி முதல் தற்போது இருக்கிற ப்ரிபெய்ட் கட்டணம் மேலும் 25 சதவீதம் அதிகரிக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் தன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது ஏர்டெல். இதன்படி மாதம் 1ஜிபி டேட்டா ரூ.219 ஆக இருந்த கட்டணம் ரூ.265ஆக மாற இருக்கிறது. இதேபோல் ஒவ்வொரு பிளான்களுக்கும் கட்டணம் அதிகரித்திருக்கிறது. முன்னதாக 59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டண உயர்வை அதிகரித்திருப்பதால் அதன் பங்குதாரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இந்த அறிவிப்பிற்கு பின்பும் பங்குச்சந்தையில் ஏற்றத்துடனே ஏர்டெல் நீடிக்கிறது.


மக்கள் கருத்து

மகான்Nov 22, 2021 - 06:47:39 PM | Posted IP 173.2*****

கார்பொரேட் கம்பெனிகளின் திருட்டு யுக்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory