» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்தலை முன்னிட்டு அவசரமாக பணிகளை நிறைவு செய்கிறது மோடி அரசு - அகிலேஷ் குற்றச்சாட்டு

செவ்வாய் 16, நவம்பர் 2021 4:14:08 PM (IST)

உ.பி.,யில் தேர்தலை முன்னிட்டு அவசரமாக எக்ஸ்பிரஸ் ரயில்வே தள பணிகளை நிறைவு செய்கிறது மோடி அரசு,'' என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய கட்சிகள் தங்கள் அரசியல் பலத்தை நிரூபிக்க உத்தரபிரதேச மாநில தேர்தலை ஒரு முக்கிய களமாகக் கருதுகின்றன. இதில், வெற்றிபெற காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட தேசிய கட்சிகளும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகளும் தற்போது தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த முறை பா.ஜ., உத்தரபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசு 5 ஆண்டுகாலம் ஆட்சியை தற்போது நிறைவு செய்துள்ளது. இம்முறை பா.ஜ., தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில் சமாஜ்வாடி கட்சி பா.ஜ.,வுக்கு பெரும் போட்டியாக விளங்குகிறது.

இதன் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பா.ஜ.,வுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். காசிப்பூர் மற்றும் உபி., தலைநகர் லக்னோ ஆகிய நகரங்களை சுல்தான்பூர் வழியாக இணைக்கும் 340 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் தண்டவாள தடம் உருவாக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதை விரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இதுகுறித்து தற்போது குற்றம்சாட்டிய அகிலேஷ் யாதவ், அடுத்த ஆண்டு தேர்தல் வரவிருப்பதால் மிக முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாள கட்டமைப்புப் பணியை மத்திய பா.ஜ., அரசு அரைகுறையாக விரைவில் முடிக்க முயற்சி மேற்கொள்கிறது. முழுக்க, முழுக்க அரசியல் நோக்கத்துக்காக மக்கள் பயன்படுத்தும் இந்த வழித்தடத்தில் பா.ஜ., அரசு அவசரம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory