» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏழை ரிக்ஷா தொழிலாளியை கோடீஸ்வரனாக்கிய மூதாட்டி: ஓடிசாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

செவ்வாய் 16, நவம்பர் 2021 8:58:07 AM (IST)



ஒடிசாவில் ரிக்‌ஷா தொழிலாளிக்கு மூதாட்டி தனது ரூ.1 கோடி மதிப்பு சொத்துக்களை எழுதி வைத்தசம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்தவர் மினாதி பட்நாயக் (63). இவரது கணவர் கடந்த ஆண்டு கல்லீரல் செயலிழப்பால் காலமானார். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், ஒரே மகள் மாரடைப்பால் சமீபத்தில் இறந்தார். இதனால் நிர்கதியாய் நின்ற மினாதிக்கு வயதான காலத்தில் உதவ உறவினர்கள் ஒருவர் கூட முன்வரவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில் மினாதிக்கு, அவரது குடும்பத்திற்காகவே 25 ஆண்டாக உழைத்த ரிக்‌ஷா தொழிலாளி புதா சமலியின் குடும்பத்தினர்தான் உதவி செய்துள்ளனர். 

அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தனது 3 மாடி வீடு, தங்க நகை என ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துக்களை ரிக்‌ஷா தொழிலாளி சமலி குடும்பத்திற்கே எழுதி வைத்து நன்றிக் கடன் செலுத்தியிருக்கிறார் மினாதி. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவர் கூறியதாவது: ‘சமலி எங்கள் குடும்பத்திற்காகவே உழைத்துள்ளார். என் மகளை தினமும் தனது ரிக்‌ஷாவில் கல்லூரிக்கு கொண்டு சென்று, மாலையில் அழைத்து வருவார். எங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் புதா சமலி குடும்பத்தினர் ஆதரவாக இருந்தனர். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களுக்காக பாடுபட்டனர். 

எனவே, எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துகளை கொடுப்பதை காட்டிலும், என்னையும் எனது குடும்பத்தையும் கடந்த 25 ஆண்டுகளாக பாதுகாத்த புதா சமலிக்கு சொத்துகளை எழுதி வைக்க முடிவு செய்தேன். அதற்காக சட்டப்படி எனது சொத்துகள் அனைத்தையும் புதா சமலிக்கு எழுதி கொடுத்துவிட்டேன்.

அவர் மீது எனக்குள்ள நம்பிக்கையும், என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பும் அவருக்கு வெகுமதியை ஈட்டித் தந்துள்ளது. எனது சொத்தை அவர்களுக்குக் கொடுத்து நான் பெரிய சேவை எதுவும் செய்யவில்லை. அவர்கள் அதற்கு தகுதியானவர்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது புதா சமலியின் மனைவி மற்றும் 2 மகன், ஒரு மகள் அனைவரும் மினாதியுடனே ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சமலி கூறுகையில், ‘மினாதி, எனக்கு என் அம்மா மாதிரி. என் வாழ்நாள் முழுவதும் அவருடன் இருந்து அவரை கவனித்துக் கொள்வேன். அவர் செய்த இந்த பெரிய உதவியால் என் குடும்பத்தின் நிலையே மாறி விட்டது’ என அந்த ஏழை ரிக்‌ஷா தொழிலாளி உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.


மக்கள் கருத்து

தமிழன்Nov 19, 2021 - 07:28:45 PM | Posted IP 162.1*****

கோடியில் ஒரு பெண்மணி.நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory