» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக் காலம் நீட்டிப்பு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

திங்கள் 15, நவம்பர் 2021 4:30:22 PM (IST)

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்தது. இந்த இரு அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க வகை செய்யும் அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளது.  இந்நிலையில், சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்ததாவது "அதிகாரத்தை கைப்பற்ற  மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்க தனது விஸ்வாசிகளை  மோடி அரசு பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கப் பிரிவும், சிபிஐ அமைப்பும் சோதனை நடத்துவதை விதியாக வைத்துள்ளன. இயல்பாகவே ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும். இப்போது நேரடியாகவே 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory