» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பேருந்துகளில் சத்தமாக பாட்டு கேட்க தடை : கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சனி 13, நவம்பர் 2021 4:27:30 PM (IST)

பேருந்துகளில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதித்து கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலர் சத்தமாக வீடியோக்கள் பார்ப்பது, சிரிப்பது என பக்கத்தில் இருப்பவர்களை சங்கடத்தில் ஆழ்த்துவதை சகஜமாக பார்க்க முடியும்.இதுபோன்ற தொந்தரவுக்கு ஆளான நபர் ஒருவர் பேருந்தில் பயணிக்கும் போது, சத்தமாக பாட்டுக் கேட்கவும், வீடியோ பார்க்கவும் தடை விதிக்கக் கோரி, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பேருந்தில் பயணம் செய்யும் போது, மொபைல் போன் ஸ்பீக்கரில், அதிக சத்தம் வைத்து பாட்டு, வீடியோக்கள் பார்ப்பவர்களை, சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என பேருந்து நடத்துனர், ஓட்டுனர் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறும் பயணியை பேருந்து ஊழியர்கள் தாராளமாக பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory