» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல் டீசலை தொடர்ந்து சமையல் எண்ணெய் மீதான வரி குறைப்பு!

சனி 6, நவம்பர் 2021 12:19:47 PM (IST)

பெட்ரோல் டீசலை தொடர்ந்து  சமையல் எண்ணெய் மீதான வரியையும் மத்திய அரசு குறைத்துள்ளது

கடந்த ஓராண்டாக அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்தது. இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.5, ரூ.10 என்ற ரீதியில் குறைத்தது ஒன்றிய அரசு. இதன் காரணமாக புதுச்சேரி, கேரளா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
 
தற்போது சமையல் எண்ணெய்யின் வரியையும் குறைத்துள்ளது மத்திய  அரசு. நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் நேற்று (நவம்பர் 5) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஓராண்டாகச் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரியை 2.5 சதவிகிதத்திலிருந்து பூஜ்யமாக அரசு குறைத்துள்ளது.

இந்த எண்ணெய்களின் மீதான வேளாண் செஸ், கச்சா பாமாயிலுக்கு 20 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவிகிதமாகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 சதவிகிதமாகவும் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆர்பிடி பாமோலின் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரி 32.5 சதவிகிதத்திலிருந்து 17.5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கைகளின் காரணமாகத் தமிழகத்தில் ஒரு கிலோவுக்கு ரூ.10 வரை சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளன. உதாரணமாக, கடலூரில் ஒரு கிலோ பாமாயிலின் விலை ரூ 7-ம், கடலை எண்ணெய்யின் விலை ரூ 10-ம் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory