» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இலவச உணவு தானியம் வழங்கும் பணி நவ.30க்கு பின்னர் நீட்டிக்கப்படாது மத்திய அரசு அறிவிப்பு

சனி 6, நவம்பர் 2021 10:39:40 AM (IST)

ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் வருகிற 30-ந் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து, ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன்கீழ், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.

முதலில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி, வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இப்பணி நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறியதாவது: தற்போது பொருளாதாரம் மீண்டு வருகிறது. வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்கும் அளவுக்கு உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக உள்ளது. அந்த அளவுக்கு அரிசி, கோதுமையை வினியோகித்துள்ளோம். எனவே, வருகிற 30-ந் தேதிக்கு பிறகு இலவச உணவு தானியம் வழங்கும் பணி நீட்டிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory