» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தடுப்பூசி விழிப்புணர்வுக்கு புதுமையான வழிகளை பின்பற்ற வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதன் 3, நவம்பர் 2021 4:42:37 PM (IST)

தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புதுமையான வழிகளை கையாள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்..

தடுப்பூசி செலுத்தும்பணிகள் மந்தமாக நடபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது, தற்போது நாடு எட்டியுள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் பலரது கடின உழைப்பு உள்ளது. ஆஷா பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் பல கிராமங்களுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் முழு இலக்கை அடைவோம்.

கரோனா தொற்றை முழுமையாக ஒழிக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும். இதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. கடந்த 100 ஆண்டுகளில் இது மிகப்பெரிய பேரிடர். நாடு பல சிக்கலான சவால்களை சந்தித்துள்ளது. அதுபோன்று கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக புதுமையான வழிகளை பின்பற்ற வேண்டும். மக்களிடம் புதுமையான முறைகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி முழு இலக்கை அடைய வேண்டும் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory