» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அனைத்து வகை பட்டாசுகளை விற்க, வெடிக்க தடை; அரியானா அரசு உத்தரவு

செவ்வாய் 2, நவம்பர் 2021 11:16:31 AM (IST)

அரியானாவில் 14 மாவட்டங்களில் அனைத்து வகை பட்டாசுகளை விற்க, வெடிக்க அரசு தடை விதித்து உள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன.  இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிப்பது வழக்கம்.  எனினும், பசுமை பட்டாசுகளை தவிர பிற பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், அரியானாவில் உள்ள 14 மாவட்டங்களில் அனைத்து வகை பட்டாசுகளை விற்க மற்றும் வெடிக்க அரசு தடை விதித்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள செய்தியில், கடந்த ஆண்டு நவம்பரில் காற்றின் தரம் மிக குறைந்த நகரங்களிலும் இந்த தடை விதிக்கப்படுகிறது.  மூத்தோர், குழந்தைகள், இணை நோய்கள் கொண்டவர்கள் மற்றும் சுவாச கோளாறு பாதிப்புளை கொண்டவர்கள் மற்றும் குளிர்கால நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory