» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

2ஜி அலைக்கற்றை ஊழல் தவறான தகவல்: ட்விட்டரில் ட்ரென்ட் ஆன கனிமொழி ஹாஷ்டாக்!!

வெள்ளி 29, அக்டோபர் 2021 12:49:17 PM (IST)

உலகையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் தவறான தகவல் என்று வினோத் ராய் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். 

2ஜி ஊழல் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரைச் சேர்க்கக்கூடாது என்று தன்னை காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபம் நிர்ப்பந்தித்ததாக வினோத் ராய் கூறியிருந்தார். தற்போது, காங்கிரஸ் கட்சியினர் மீது அவதூறு கூறிய முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் டெல்லி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.  

இந்த தகவலைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சய் நிருபம், 2ஜி மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது தவறான அறிக்கை சமர்ப்பித்து அவதூறு கிளப்பிய குற்றத்திற்காக நாட்டு மக்களிடம் வினோத் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

திமுகவைச் சார்ந்த கனிமொழி எம்.பி மற்றும் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, 2G வழக்கில் பொய்யாகக் குற்றம்-சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாகச் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.  2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது என்று,  #CrystalClearKanimozhi ஹாஷ்டாக் Twitter-ல் ட்ரென்ட் ஆகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory