» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேள்வி கேட்டவர்களுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசி பதில் அளித்துள்ளது : பிரதமர் மோடி

வெள்ளி 22, அக்டோபர் 2021 12:44:38 PM (IST)

கேள்வி கேட்டவர்களுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசி சாதனை பதிலளித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2021, ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட கரோனாவுக்கு எதிரான வலுவான தடுப்பூசிப் போர், நேற்று (அக்.22 ஆம் தேதி) 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், "கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை ஊக்குவிக்க கைகளைத் தட்டியும், தட்டுகளில் ஓசை எழுப்பியும், விளக்கேற்றியும் உற்சாகப் படுத்தக் கூறினோம்.

அதைப் பலரும் கேலி செய்தனர். இது எப்படி வைரஸ் ஒழிப்புக்கு உதவும் என்றனர். ஆனால், மக்கள் வேண்டுகோளை ஏற்று செயல்பட்டனர். அவர்கள் கைதட்டியதும், விளக்கேற்றியதும் தடுப்பூசித் திட்டத்தில் அவர்களின் பங்களிப்பை உணர்த்துகிறது. நமது தடுப்பூசித் திட்டம் தொழில்நுட்பத்தால் ஆனது. அறிவியல் ரீதியலானது. அறிவியல் தான் அதன் இதயத் துடிப்பு மற்றபடி கைதட்டலும், விளக்கொளியும் மக்கள் பங்களிப்பை ஊக்கப்படுத்தியது.

இன்று 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளதால் இந்தியப் பொருளாதாரம் குறித்து நிபுணர்கள் நேர்மறையான கணிப்புகளை முன்வைக்கின்றனர். இப்போது நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பொருளாதாரம் நிச்சயம் மென்மேலும் ஏற்றம் பெரும் சூழல் உருவாகியுள்ளது" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory