» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உ.பி. தேர்தலில் 40% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு: பிரியங்கா காந்தி அறிவிப்பு

செவ்வாய் 19, அக்டோபர் 2021 5:20:44 PM (IST)

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் 40% தொகுதிகளில் பெண்கள் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு முதல் பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டிகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது: "உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீதத்தை பெண்கள் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.” கடந்த தேர்தலில் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், பெண்களின் வாக்குகளை கவரும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory