» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஊரெல்லாம் வெள்ளம்: அண்டாவில் பயணித்து மண்டபத்துக்கு வந்த திருமண ஜோடி!

செவ்வாய் 19, அக்டோபர் 2021 11:26:23 AM (IST)கேரளத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அண்டாவில் பயணித்து வந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. 

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் செங்கனூரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவப் பணியாளா்களாகப் பணியாற்றி வரும் ஆகாஷ், ஐஸ்வரியா காதல் ஜோடிகளுக்குத்தான் இந்த சுவாரஸ்யமான திருமணம் நடைபெற்றுள்ளது. மாநிலத்தில் தொடா் கன மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் அதிக உயரத்துக்கு வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. அதன் காரணமாக, திருமண ஜோடி இருவரும் தாளவாடியில் கோயிலுக்கு அருகே அவா்களுக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், திருமணத்தில் சமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட பெரிய அலுமினிய சமையல் பாத்திரத்தில் திருமண ஜோடி இருவரையும் அமரவைத்து, மண்டபத்துக்கு உறவினா்கள் அழைத்து வந்துள்ளனா். அதன்மூலம், அவா்களுக்கு திட்டமிட்டபடி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னா், தங்களுடைய பயண அனுபவம் குறித்து புதுமணத் தம்பதிகள் கூறுகையில், ‘இரு தினங்களுக்கு முன்பு இந்தக் கோயிலுக்கு வந்தபோது எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால், இந்த இடம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இருந்தபோதும், வாழ்வில் மிக முக்கியமான இந்தத் தருணத்தை தள்ளிப்போடக் கூடாது என்பதால், திட்டமிட்டபடி திங்கள்கிழமை திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். அதனால், சமையல் பாத்திரத்தையே படகாக மாற்றி மண்டபத்துக்கு வந்துசோ்ந்தோம்’ என்றனா்.

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கேரளத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டது. பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory