» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எடியூரப்பாவுக்கு கரோனா: முதல்வர் அலுவலக ஊழியர்கள் 6 பேருக்கு தொற்று உறுதி

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 5:06:39 PM (IST)

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும், அவரது மகள் பத்மாவதிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சமீபத்தில் முதல்வரை சந்தித்தவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொண்டு, தொடர்ந்து கரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், முதல்வரின் கடந்த வார பயண விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கர்நாடக முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் எடியூரப்பா கலந்து கொண்டுள்ளார். இதில், துணை முதல்வர், அமைச்சர்கள் என பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory