» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளத்தில் கரோனா பரவலுக்கு கவனக்குறைவே காரணம்: முதல்வர் பினராயி விஜயன்

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 4:43:24 PM (IST)

கேரளத்தில் கரோனா பரவலுக்கு கவனக்குறைவே காரணம். கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என முதல்வர் பினராயி விஜயன்தெரிவித்துள்ளார். 

கரோனா பரவலைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், பின்னர் மக்கள் தாங்கள் மேற்கொண்ட பாதுகாப்பு முறைகளை குறைத்தனர். இதன் விளைவாகவே மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆரம்ப காலத்தில் நாங்கள் கரோனா பரவலுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம், ஆனால், பின்னர் முன்னெச்சரிக்கைகள் ஒரு பொருட்டல்ல என்ற ஒரு எண்ணம் இருந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் குறைபாடு இருப்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். 

தற்போதைய நிலைமைக்கு யாரையும் குறைகூற விரும்பவில்லை. எனினும், பொறுப்பு மிக்கவர்கள் குற்ற உணர்ச்சியுடன் மனம் திரும்ப வேண்டும். முதலில் நிலைமையை திறம்பட கையாண்ட எங்களிடம் பின்னர் சிறிது சரிவு ஏற்பட்டது. இதுவே நிலைமை மோசமடைய வழிவகுத்தது. சுருக்கமாக, ஒரு சிறிய அளவிலான கவனக்குறைவே இதற்கு காரணம் என்பதை நாம் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். நோயை குணப்படுத்துவதைவிட நோய் வராமல் தடுப்பதே சிறந்தது என்று குறிப்பிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory