» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பக்ரீத் திருநாள்: டெல்லி ஜும்மா மசூதியில் இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

சனி 1, ஆகஸ்ட் 2020 12:54:07 PM (IST)பக்ரீத் பெருநாளையொட்டி புகழ்பெற்ற டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

இஸ்லாமிய நாள்காட்டியின்படி துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாள் ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தியாக திருநாளான இந்நாளை நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் சனிக்கிழமை காலை தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். 

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொழுகைக்கு வந்த அனைவரும் தெர்மோமீட்டர் கொண்டு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.  கரோனா தொற்று பொது முடக்கத்தால் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory