» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரை பள்ளிகளை திறக்கக்கூடாது: 2 லட்சம் பெற்றோர் மனு

செவ்வாய் 2, ஜூன் 2020 8:13:46 AM (IST)

கரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரை பள்ளிகளை திறக்கக்கூடாது என்று 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஜூலை மாதம் ஆலோசனை நடத்திய பிறகு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரம் பெற்றோர் கையெழுத்திட்ட மனு ஒன்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பது என்பது அரசின் மிகமோசமான முடிவாகும். நெருப்பை அணைக்க வேண்டி இருக்கும்போது, நெருப்புடன் விளையாடுவதற்கு சமமானது. நடப்பு முதலாவது பருவம், ஆன்லைன் வழியிலேயே நீடிக்க வேண்டும். கரோனா அபாயம் முற்றிலும் நீங்கும் வரையோ, அல்லது, தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையோ பள்ளிகளை திறக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து

TuticorianJun 2, 2020 - 12:06:31 PM | Posted IP 162.1*****

ofcourse, parents cannot afford to risk their children's life. Indeen life is more important than education

TuticorianJun 2, 2020 - 12:00:21 PM | Posted IP 173.2*****

Ofcourse, Parents cannot afford to risk their children's life. Indeed, life is more important than education.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory