» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஞாயிறு 31, மே 2020 8:52:47 PM (IST)

ஜூன் 1 முதல் இயக்கப்படும்  சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையத்திற்கு வர வேண்டும்.

2. அனைத்து பயணிகளும் மருத்துவ சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்படுவார்கள்.

3. கரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

4. ரயில் பெட்டிகளில் உள்ளே நுழையும் போதும், பயணம் செய்யும் போதும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

5. ரயில் நிலையத்திற்கு வரும் போதும், பயணம் செய்யும் போதும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும்.

6. பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

7. பயணச்சீட்டு அடிப்படையிலேயே பயணிகளும் அவர்கள் வரும் வாகனங்களும் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும்.

8. சென்று சேரும் ரயில் நிலையத்திலும் அரசு வரையறுத்துள்ள படி சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

9. நோய் தொற்றைத் தவிர்க்க, பயணிகள்  உணவு  வீட்டிலிருந்து கொண்டு வரலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory