» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது

திங்கள் 25, மே 2020 12:01:17 PM (IST)

சென்னையில் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை 61 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் தொடங்கியது.

கரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. விமானம், ரெயில், பஸ் போக்குவரத்து முடங்கியது. இதற்கிடையே, ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதனால் மே 25ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்நாட்டு விமான சேவை இன்று காலை மீண்டும் தொடங்கியது. சென்னையில் இருந்து டெல்லிக்கு 114 பயணிகளுடன் முதல் விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இரு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory