» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கல்வி நிலையங்களைத் திறப்பது பற்றி ஏப். 14-ல் முடிவு எடுக்கப்படும் : மத்திய அமைச்சர்

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 5:52:18 PM (IST)

நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது பற்றி ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், அரசைப் பொருத்தவரை மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பே மிகவும் முக்கியம், எனவே, கரோனா நிலைமை பற்றி ஆராய்ந்த பிறகு கல்வி நிலையங்களைத் திறப்பது பற்றி ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடியிருக்க நேரிட்டாலும் மாணவ, மாணவியருக்குக் கல்வியில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளவும் தமது அமைச்சகம் தயாராக இருப்பதாகவும், இந்தத் தருணத்தில் கல்வி நிலையங்களைத் திறப்பது பற்றி முடிவெடுப்பது மிகவும் கடினம். 

ஏப்ரல் 14 ஆம் தேதி நிலைமையை ஆராய்வோம். நிலைமையைப் பொருத்துத் திறப்பதா, மேலும் விடுமுறையை நீடிப்பதா என்று முடிவெடுப்போம்  என்றார். ஊரடங்கிற்குப் பிந்தைய நிலைமை எவ்வாறு அமைச்சகம் எதிர்கொள்ளப் போகிறது என்று கேட்டபோது, நாட்டில் 34 கோடி மாணவ, மாணவியர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க மக்கள்தொகையைவிட இது அதிகம், இவர்கள் இந்த நாட்டின் செல்வம். அவர்களுடைய பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்றும் கல்வித் துறையையும் கவனிக்கும் அமைச்சர்  பொக்ரியால் தெரிவித்தார்.ஏப்ரல் 14-க்குப் பிறகு ஊரடங்கு தொடராது என்பதைப் போல அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. ஊரடங்கிற்கு முன்னரே பெரும்பாலான கல்வி நிலையங்களில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory