» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 472 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி: மத்திய சுகாதாரத் துறை

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 5:48:15 PM (IST)

இந்தியாவில் ஒரே நாளில் 472 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தது.

மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இன்றைய தேதி வரை இந்தியாவில் 274 மாவட்டங்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,374 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் கூடுதலாக 472 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 

மொத்தம் 79 பேர் பலியாகியுள்ளனர். நேற்று முதல் கூடுதலாக 11 பேர் பலியாகியுள்ளனர். 267 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் 4.1 ஆக உள்ளது. தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த இரட்டிப்பாவதற்கான நாட்கள் 7.4 ஆக இருந்திருக்கும்." என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory