» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் பாதிப்பு உண்டாகும் -காங்கிரஸ் விமர்சனம்

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 9:34:00 AM (IST)

மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு, இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார்.அந்த செய்தியில் அவர், "கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு இருக்கின்றனர். இதை எடுத்துக்காட்டும் வகையில், 5-ந்தேதி (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு, அகல்விளக்கு அல்லது டார்ச் விளக்கு அல்லது செல்போன் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- அமைச்சர் பதவி உள்ளிட்ட பதவி வகித்து மின்துறையில் 30 ஆண்டுகளாக தொடர்பில் உள்ள ஒருவர், 5-ந் தேதி (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விடுமாறு பிரதமர் விடுத்துள்ள அழைப்பு, மின் கட்டமைப்பு மற்றும் அதன் நிலைத்தன்மையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்கிறார். இது சரியாக நிர்வகிக்கப்படும் என்று உண்மையிலேயே நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதே போன்ற கருத்துகளை மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட்டும் வெளியிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory