» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் 15-ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை ஊழியர்கள் பணிக்கு தயாராக உத்தரவு

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 9:09:14 AM (IST)

இந்தியாவில் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் ரயில் சேவைகளை தொடங்க தயாராக இருக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு ரயில் சேவை தவிர்த்து அனைத்து பயணிகள் ரயிலும் வருகிற 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 15-ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு, செயல்பாடு உள்ளிட்ட துறைகளின் அனைத்து ஊழியர்கள், ரயில்வே கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள் ஆகியோர் 15-ம் தேதி முதல் மீண்டும் பணிக்கு வர தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், மத்திய அரசு நியமித்துள்ள அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கிய பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ரயில்வே சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான செயல் திட்டம் ஒன்றை தயாரித்து கால அட்டவணை, ரயில்களின் கால இடைவெளி, காலியாக உள்ள ரயில்வே ரேக்குகள் ஆகியவை தொடர்பான திட்டம் ஆகியவற்றை அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே துறை அனுப்பி உள்ளது. அனைத்து மண்டலங்களும் ரயில் சேவையை தொடங்க தயாராக இருக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. 

15-ம் தேதியில் இருந்து ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட 80 சதவீத ரயில் சேவைகள் திட்டமிட்டபடி மீண்டும் தொடங்கும். உள்ளூர் ரயில்களும் விரைவில் மீண்டும் இயங்குவதற்கு வாய்ப்புகள் உள்னன. ரயில் பயணிகளை ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனைக்கு பிறகே பயணம் செய்ய அனுமதிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.ரயில் சேவைகள் 14-ம் தேதி வரை மட்டுமே ரத்து செய்யப்பட்டு உள்ளதால், 15-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதற்கு புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்க தேவையில்லை என்றும், இதுதொடர்பான உறுதியான செயல்திட்டம் இந்த வார இறுதியில் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory