» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வீட்டிலேயே தயாரித்த முகக் கவசங்களை அணியலாம்‍: மத்திய அரசு அறிவுறுத்தல்

சனி 4, ஏப்ரல் 2020 4:52:22 PM (IST)

பொதுமக்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக் கவசம் அணியலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 

இந்த நிலையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா பெரிய அளவில் சமூகத்தில் பரவாமல் தடுக்க முக கவசம் உதவும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முக கவசங்களை மக்கள் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory