» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மருத்துவமனையில் ஆபாச நடத்தை: தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள்6 பேர் மீது என்எஸ்ஏ வழக்கு!!

வெள்ளி 3, ஏப்ரல் 2020 4:35:42 PM (IST)

மருத்துவமனையில் ஆபாச நடத்தையில் ஈடுபட்டதாக தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் 6பேர் மீது வழக்குப் பதிவு செய்ய்பபட்டுள்ளது. 

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து அப்புறபடுத்தபட்டு  கரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர்.  அந்த வகையில் மாநாட்டுக்கு சென்ற வந்த 6 பேர் காசியாபாத் எம்எம்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. தனிமை வார்டில் இவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு சிகிச்சைபெறும்  6 பேரும் மருத்துவமனை வார்டுக்குள்ளேயே நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக மருத்துவமனை நிர்வாக சார்பில் காவல்துறைக்கு புகார் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

அந்தப் புகாரில் "கரோனா தொற்றுடன் காசியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் பங்கேற்பாளர்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் விசாரணை நடத்தியதுடன், ஆபாச நடத்தையில் ஈடுபட்ட 6 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இது குறித்து மாநில அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் என கூறி உள்ளது. மேலும், காசியாபாத் மருத்துவமனையில் பெண் நர்சிங் ஊழியர்களுடன் தவறாக நடந்து கொண்ட தப்லிகி ஜமாத்தின் உறுப்பினர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ்  வழக்கு பதிவு செய்ய யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory