» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.80 லட்சம் நிதியுதவி ரோகித் சர்மா வழங்கினார்.

செவ்வாய் 31, மார்ச் 2020 4:43:26 PM (IST)

கரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 80 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.

கரோனா வைரஸ் வேகமாக பரவி கடும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கலாம் எனவும், அதை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதேபோல் மாநில அரசுகள், அந்தந்த மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா, கரோனா நிவாரணப் பணிகளுக்காக 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.  பிரதமரின் நிவாரண நிதிக்கு 45 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், Feeding India மற்றும் Welfare Of Stray Dogs ஆகிய அமைப்புகளுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கியிருப்பதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory