» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை: டெல்லி நீதிமன்றம்

திங்கள் 17, பிப்ரவரி 2020 5:46:04 PM (IST)

நிர்பயா, பலாத்கார, கொலை குற்றவாளிகள் நால்வருக்கும், மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று, டெல்லி நீதிமன்றம் இன்று வாரண்ட் பிறப்பித்துள்ளது.

டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அக்ஷய் சிங் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 

கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை இவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு இவர்கள் தனித்தனியாக அனுப்பிய கருணை மனுக்களும் சமீபத்தில், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, கருணை மனுக்களையும், சீராய்வு மனுக்களையும் மீண்டும் மீண்டும் தாக்கல் செய்து, அதுவும் தனித்தனியாக தாக்கல் செய்து நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை ஒட்டித்தான் நிர்பயாவின் பெற்றோர் கூட சென்ற வாரம் நீதிமன்ற நுழைவாயிலிலேயே போராட்டம் நடத்தினார்கள். 

ஒருவர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தள்ளுபடியானதும், இன்னொருவர் தாக்கல் செய்வது என குற்றவாளிகள் தொடர்ந்து இழுத்தடித்து வந்தனர். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு, பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு, கருணை மனுக்கள் என்று தண்டனையை எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்தினர். நீதிமன்றங்கள் இதுவரை அவர்களுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் அனுமதித்தது. தற்போது அந்த வாய்ப்புகள் அனைத்துமே முடிந்து போயுள்ளன.

மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு, குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட வேண்டும் என்று, டெல்லி நீதிமன்றம் இன்று வாரண்ட் பிறப்பித்துள்ளது. திகார் சிறையில், இந்த தண்டனை நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது. முதலில் ஜனவரி 22ம் தேதியும், பிறகு பிப்ரவரி 1ம் தேதியும் என இருமுறை, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டு, சட்டப் போராட்டத்தை காரணம் காட்டி அவை தள்ளிப்போயுள்ளன. இம்முறை மூன்றாவது முறையாக நான்கு குற்றவாளிகளுக்கும், மரண தண்டனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை பார்வையிடவும் வாய்ப்புள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory