» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாகால் விரைவு ரயிலில் கடவுள் சிவபெருமான் பெயரில் ஒரு முன்பதிவு இருக்கை

திங்கள் 17, பிப்ரவரி 2020 12:21:14 PM (IST)

மூன்று ஜோதிர்லிங்கங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மகாகால் விரைவு ரயிலில், கடவுள் சிவன் பெயரில் ஒரு முன்பதிவு இருக்கையை இந்திய ரயில்வே ஏற்படுத்தியுள்ளது 

வாராணசி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன், ஓம்காரேஸ்வர் ஆகிய மூன்று ஜோதிர்லிங்கங்களை இணைக்கும் மகாகால் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறையில் நேற்று தொடக்கி வைத்தார். இரவில் செல்லும் அந்த ரயில் தனியார் மூலம் இயக்கப்படுகிறது. மகாகால் விரைவு ரயிலின் பி5 பெட்டியில் 64ஆம் இருக்கை, கடவுள் சிவபெருமானுக்காக நிரந்தரமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் கூறியுள்ளார்.

இதுவே முதல் முறை, கடவுள் சிவன் பெயரில் ஒரு இருக்கை நிரந்தரமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இருக்கையில் கோயிலின் படம் வரையப்பட்டு, பயணிகளுக்கு இதன் மூலம் அந்த இருக்கை கடவுளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிய வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

சாமிFeb 18, 2020 - 11:35:54 AM | Posted IP 162.1*****

நிர்வாண நாட்ல கோமணம் கடினவன் பைத்தியக்காரன்

ராமநாதபூபதிFeb 17, 2020 - 04:40:17 PM | Posted IP 173.2*****

உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory