» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி முதல் அமைச்சரானார் அரவிந்த் கேஜ்ரிவால்: மக்கள் முன்னிலையில் பதவியேற்பு

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 5:24:03 PM (IST)ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால், 3 வது முறையாக டெல்லி முதல் அமைச்சராக இன்று பதவியேற்றார்.

டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால், மூன்றாவது முறையாக டெல்லியின் முதல் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். கேஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகிய 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

கேஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பல்வேறு மாநில முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் முன்னிலையில் பதவியேற்பதாக கூறினார் கேஜ்ரிவால். டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் இன்று பிற்பகல் 12:00 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அழைப்பின் பேரில் ஆசிரியா்கள், மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவைக் காண்பதற்காக ஏராளமானோர் வந்திருந்தனர். ராம் லீலா மைதானம் ஆம் ஆத்மி தொண்டர்கள் மற்றும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது. 

பிரதமர் நரேந்திர  மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் கேஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு  பிரதமர் மோடி வரவில்லை. கேஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் முதல் அமைச்சர் கேஜ்ரிவால் தோற்றத்தில் 100-க்கும் மேற்பட்ட குட்டி கேஜ்ரிவால்கள் சிகப்பு வண்ண மப்ளர் அணிந்து, ஆம் ஆத்மி தொப்பி, கண்ணாடி அணிந்து வெற்றி சின்னத்தை காண்பித்து மைதானத்தில் வலம் வந்தது விழாவில் உற்சாகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory