» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து காங்கிரசுக்கு தாவிய அல்கா லம்பாவின் எம்எல்ஏ பதவி பறிப்பு!!

வெள்ளி 20, செப்டம்பர் 2019 3:28:25 PM (IST)

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து காங்கிரசுக்கு தாவிய பெண் எம்எல்ஏ அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி சார்பில் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு அல்கா லம்பா எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அல்கா லம்பா அதிருப்தியில் இருந்தார். இதனால் கட்சி நடவடிக்கையில் இருந்து விலகி இருந்தார்.

கடந்த 6-ந் தேதி அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ராம்நிவாஸ் கோயலிடம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரவ் பரத்வாஜ் மனு கொடுத்தார்.அதன்அடிப்படையில் அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நேற்று உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்கம் செப்டம்பர் 6-ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாக கூறி உள்ளார்.ஏற்கனவே கட்சி தாவல் தடை சட்டத்தின்படி ஆம் ஆத்மியை சேர்ந்த கபில் மிஸ்ரா, சந்தீப்குமார், அனில் பாஜ்பாய், தேவேந்திர ஷெகாவத் ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory