» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்

சனி 24, ஆகஸ்ட் 2019 12:42:11 PM (IST)

முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலைக் குறைவால் இன்று காலமானார். 

சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தார் அருண் ஜேட்லி. அவ்வப்போது ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் வெளிநாட்டிலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மிக மோசமான நிலையை அடைந்தது. இன்று அவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory