» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விமானப் படை ஹெலிகாப்டரை தாக்கியது இந்திய ஏவுகணைதான்: விசாரணையில் உறுதி

சனி 24, ஆகஸ்ட் 2019 11:09:26 AM (IST)ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காமில் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தாக்கியது, இந்திய ஏவுகணைதான் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

முன்னதாக, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதற்கு மறுநாள், இந்திய பகுதிக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் முயற்சித்தன. அந்த முயற்சியை, இந்திய விமானப் படை முறியடித்தது. இதனிடையே, பட்காம் பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் 6 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். 

முதலில் இச்சம்பவம் விபத்தாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், இந்திய வான்பாதுகாப்பு அமைப்பால் தவறுதலாக தாக்கப்பட்டு, ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது பின்னர் தெரியவந்தது.இதுதொடர்பாக, இந்திய விமானப் படை தரப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டது. இந்திய ஏவுகணை தாக்கியே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பான ஒரு உயரதிகாரி உள்பட 4 அதிகாரிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory