» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜிஎஸ்டி வரி விதிப்பு எளிமையாக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 8:44:04 PM (IST)

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை விரைவில் எளிமையாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

நாட்டில் ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சி குறைந்து பொருளாதார மந்தநிலை நிலவுவதாக கருத்துக்கள் நிலவிவரும் வேளையில், டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவும் வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. 

எனவே இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாட்டில் மட்டும் இந்த சிக்கல் என்பது இல்லை.இந்த சூழலின் காரணமாக  உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.2 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படலாம்.இந்நிலையில் உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை  காட்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாகவே உள்ளது. இன்னும் கூறுவதானால் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாக உள்ளது.

ஜி.எஸ். டி வரிவிதிப்பு முறை இன்னும் எளிமையாக்கப்படும்.இதுதொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து , பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.அதேபோல் வங்கிகளிலிருந்து கடன்பெற்றவர்கள் கடனைத் திரும்ப செலுத்திய 15 நாள்களுக்குள் கடன் வாங்கியவரின் ஆவணங்களை வங்கிகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory