» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 1:45:13 PM (IST)

மாநிலங்களவை எம்.பி.யாக முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு  போட்டியின்றி மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவை செயலரும், தேர்தல் அதிகாரியுமான பிரமிள் குமார் மாத்தூர் வெளியிட்டார்.இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2019 வரை அஸ்ஸாமில் இருந்து தொடர்ந்து 5 முறை மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதில் 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்துள்ளார். 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரு முறை பிரதமராக அவர் பதவி வகித்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதியோடு அவரது எம்.பி. பதவிக்காலம் நிறைவுற்றது. அஸ்ஸாம் சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்எல்ஏக்களின் பலம் இல்லாததால், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory