» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: ஆளுநர் அறிவிப்பு

புதன் 14, ஆகஸ்ட் 2019 10:53:32 AM (IST)



சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, அங்கு வன்முறை எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுதந்திர தினத்திற்கு பிறகு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கவனர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் உள்ள லால் சவுக் பகுதியில் தேசியக்கொடியேற்ற இருப்பதாக வெளியான தகவலையும் ஆளுநர் சத்யபால் மாலிக் மறுத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory