» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சமாஜ்வாடி கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது - தனித்து போட்டியிட மாயாவதி முடிவு

செவ்வாய் 25, ஜூன் 2019 8:55:55 AM (IST)

சமாஜ்வாடி கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இரு துருவங்களாக இருந்த கட்சிகள். நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை தோற்கடிப்பதற்காக இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியில் அஜித்சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியும் இடம் பெற்று இருந்தது.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய லோக்தளம் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த கூட்டணியால் பாரதீய ஜனதாவை தோற்கடிக்க முடியவில்லை.

கூட்டணி அமைத்தால் பாரதீய ஜனதாவை எளிதில் வீழ்த்தவிடலாம் என்று கணக்கு போட்ட மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும், இந்த தேர்தல் தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் தோல்விக்கு பிறகு இரு கட்சியினருமே ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில், சமாஜ்வாடியின் வாங்கு வங்கி நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்கு உதவவில்லை என்றும், எனவே உத்தரபிரதேச சட்டசபையில் காலியாக இருக்கும் 12 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும் என்றும் சமீபத்தில் மாயாவதி அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தேர்தலுக்கு பின் சமாஜ்வாடி நடந்து கொள்ளும் விதம் காரணமாகவும், அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பாரதீய ஜனதாவை தோற்கடிக்க முடியாது என்பதாலும், எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவது என்று பகுஜன் சமாஜ் முடிவு செய்து உள்ளது. கட்சியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இனி எந்த தேர்தலிலும் சமாஜ்வாடியுடன் கூட்டணி கிடையாது” என்று குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம்சங்கர் வித்யார்த்தி கருத்து தெரிவிக்கையில், மாயாவதி அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், அவரது இந்த நடவடிக்கை சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்றும் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory