» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகாரில் கனமழை காரணமாக 10 பேர் பலி: நிதியுதவி வழங்க நிதிஷ் அரசு உத்தரவு

ஞாயிறு 23, ஜூன் 2019 7:35:32 PM (IST)

பீகாரில் இடி- மின்னலுடன் பெய்த கனமழையின்போது ஏற்பட்ட பிற விபத்து சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெயில், அனல் காற்றினால் பாதிக்கப்பட்ட பீகார் மாநிலத்தில் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து இடி, மின்னல், காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழையின் போது, கடந்த 48 மணி நேரத்தில் இடி, மின்னல் தாக்கியதிலும், பிற விபத்து சம்பவங்களிலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகாரில் 2 நாட்களும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.  கஹாரியா, பங்கா, ஜமூய், புக்ஸார், பேகுஸராய் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதில் 6 பேர் இறந்துள்ளனர் என அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் உதவித்தொகை வழங்க பீகார் மாநில முதலமைச்சர்  நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இயற்கை பேரிடர் நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் நிதிஷ் குமார். காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவியையும் மருத்து சிகிச்சையையும் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory