» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் சண்டை: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஞாயிறு 23, ஜூன் 2019 7:32:21 PM (IST)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் தரம்டோரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணவும், அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காணவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory