» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம்: மாற்று வான்வழியை பயன்படுத்த இந்திய விமானங்கள் முடிவு

ஞாயிறு 23, ஜூன் 2019 10:32:59 AM (IST)

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இந்திய விமானங்கள் ஈரான் வான்வழியை பயன்படுத்தாமல் வேறு வழியாக திருப்பி விடப்படும் என விமான  போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ஓமன் வளைகுடா பகுதியில் கடந்த வாரம் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ஜூன் 20ம் தேதி ஈரான் வான்வழியாக பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அதிபர் டிரம்ப் சிறிது நேரத்தில் அதை திரும்ப பெற்றார். இந்த இரு சம்பவங்களால் அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஆளில்லா விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து டச், ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய விமான நிறுவனங்கள் ஈரான் வான்வழியே செல்லும் விமானங்களை ரத்து செய்தன. தங்கள் விமானங்களை வேறு பாதையில் செலுத்த முடிவெடுத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்திய விமான போக்குவரத்துத் துறையும் ஈரான் வான்வழியை தவிர்க்க முடிவெடுத்துள்ளது. இது குறித்து விமான  போக்குவரத்து இயக்குநரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் ஆலோசனையின் பேரில் இந்திய விமான நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் விமானங்களை ஈரான் வான்வழிக்கு பதிலாக வேறு பாதையில் செலுத்த முடிவெடுத்துள்ளன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலகோட் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்ட போது பல சர்வதேச விமானங்களை  இந்தியா ரத்து செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.இந்த சூழ்நிலையில் தற்போது ஈரான் வான்வழியைத் தவிர்க்க இந்திய விமானங்கள் முடிவெடுத்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு செல்லும் சர்வதேச விமானங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory