» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பட்ஜெட்டுக்காக அல்வா கிண்டும் பணி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்

சனி 22, ஜூன் 2019 5:09:08 PM (IST)மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அச்சடிக்கும் பணியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி இன்று தொடங்கி வைத்தார்.

பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இதையடுத்து 2019-20ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது.  நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இதுவாகும்.


மக்கள் கருத்து

உண்மைJun 23, 2019 - 01:02:50 PM | Posted IP 108.1*****

மக்களுக்கு அல்வா கொடுக்காமல் இருந்தால் சரிதான்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory