» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விபத்துக்களான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழப்பு: உடல்கள் மீட்பு

வியாழன் 13, ஜூன் 2019 5:03:50 PM (IST)அருணாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்களான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து புறப்பட்டது. அது கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோல் ராணுவம், இந்தோ-திபெத் படையினர் மற்றும் மாநில போலீசார், உள்ளூர் மக்களுடன் இணைந்து அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். 

மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.  இருப்பினும் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்றது. இதனிடையே கடந்த திங்களன்று அருணாச்சல பிரதேசத்தின், சியாங் மாவட்டத்தில் உள்ள கட்டி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு மீட்புக்குழுவினர் இன்று காலை சென்றனர். அப்போது விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்ததில் 13 பேரில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என விமானப்படை உறுதி செய்தது. 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 13 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Jun 13, 2019 - 07:53:56 PM | Posted IP 162.1*****

சீனா சுட்டு வீழ்த்தியதை ஏன் மறைக்கிறார்கள்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory