» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து நீடிப்பார்: கட்சி மேலிடம் உறுதி

வியாழன் 13, ஜூன் 2019 10:30:00 AM (IST)

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து நீடிப்பார் என கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா உறுதியாக கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 52 இடங்களை மட்டுமே பெற்று காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் காரிய கமிட்டி கடந்த 25-ம் தேதி கூடியது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமா முடிவை காரிய கமிட்டி ஒருமனதாக நிராகரித்தது. எனினும் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில், ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், விரைவில் நடைபெற இருக்கும் அரியானா, காஷ்மீர், ஜார்கண்ட், மராட்டிய மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி வழிகாட்டுதலின் பேரில் நடந்த இந்த கூட்டத்தில் அகமது படேல், மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்குப்பின் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் இருந்தார், இருக்கிறார், இனியும் இருப்பார். கட்சி தலைவராக தொடர்ந்து அவர் நீடிப்பார் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory