» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உயர்ந்த மனிதன்: 2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன்

வியாழன் 13, ஜூன் 2019 10:22:56 AM (IST)

மராட்டியம், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2,100 விவசாயிகளின் கடனை நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தினார்.

நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் மீது இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பரிவு காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் 1,398 பேருக்கும், மராட்டியத்தை சேர்ந்த விவசாயிகள் 350 பேருக்கும் பயிர்க்கடனை செலுத்தினார்.

தற்போது அவர் பீகாரை சேர்ந்த 2 ஆயிரத்து 100 விவசாயிகளுக்கான பயிர்க்கடனை செலுத்தி உள்ளார். இவர்கள் வங்கியில் இருந்து பயிர்க்கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாதவர்கள். இவர்களில் சில விவசாயிகளை தனது வீட்டுக்கு நேரில் அழைத்து மகள் சுவேதா, மகன் அபிஷேக் பச்சன் கையினால் பயிர்க்கடனுக்கான பணத்தை வழங்கியதாகவும், மற்றவர்களுக்கு வங்கிகள் மூலமாகவே கடனை திருப்பி செலுத்தியதாகவும் நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து

மக்களின் ஒருவன்Jun 14, 2019 - 12:30:44 PM | Posted IP 162.1*****

ஆனால் மராத்திய கன்னட கூத்தாடி குஜினியோ வாடகை பைசா கூட கொடுக்கமாட்டான்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory