» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பிரேசில் பெண் பலாத்காரம்: தொண்டு நிறுவன உரிமையாளர் கைது

புதன் 22, மே 2019 5:49:27 PM (IST)

மும்பையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து பிரேசிலைச் சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்த தொண்டு நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் பத்மகார் நந்தேகர்(52). இவர் மும்பையில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மாதம் இந்த தொண்டு நிறுவனத்தில் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளார்.  இந்த நிகழ்விற்கு பிரேசிலைச் சேர்ந்த 19 வயதுடைய பெண் ஒருவர் வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்துக்கு பணியாற்ற வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 15ம் தேதி டின்னருக்கு வருமாறு அப்பெண்ணை ஒரு ஓட்டலுக்கு வரச் சொல்லியுள்ளார். அப்பெண்ணும் நந்தேகரை நம்பிச் சென்றுள்ளார். அங்கு அப்பெண் அருந்திய குளிர்பானத்தில்மயக்க மருந்து கலந்துக் கொடுத்துள்ளார். 

அப்பெண் அதனை குடித்தவுடன் மயங்கிவிட்டார். பின்னர் ரூமிற்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலை அப்பெண்ணுக்கு இது தெரிந்தவுடன்,  தனது பாதுகாப்பாளருக்கு  தகவல் அளித்துள்ளார். உடனடியாக அப்பகுதி போலீசாரிடம் இருவரும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம்  போலீசார் நந்தேகரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர். நேற்று காலை உள்ளூர் கோர்ட்டில் நந்தேகரை ஆஜர் படுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 24ம் தேதி வரை நந்தேகரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory