» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய அரசு அரசாணை வெளியீடு!!

செவ்வாய் 27, நவம்பர் 2018 12:54:25 PM (IST)

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறை, புத்தக பைகளின் சுமை ஆகியவற்றை மாநில அரசுகள் ஒழுங்குமுறைபடுத்த வேண்டும். ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கண்டிப் பாக வீட்டுப் பாடங்கள் கொடுக்கக்கூடாது. மேலும் மொழி, கணிதம் தவிர இதர பாடங்களைப் பரிந்துரைக்கக் கூடாது. மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடங்கள், இவிஎஸ், கணிதம் ஆகியவற்றை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். 

கூடுதலாக புத்தகங்கள், இதர கல்வி உபகரணங்களை பள்ளிக்கு எடுத்து வரச் சொல்லக் கூடாது. இதனால் புத்தக பைகளின் சுமை அதிகரிக்கக்கூடும். ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் புத்தக பையின் எடை 1.5 கிலோவை தாண்டக்கூடாது. மூன்றாம், நான்காம் வகுப்புக்கு புத்தக பையின் எடை 2 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்கலாம். 5, 6-ம் வகுப்புக்கு 4 கிலோ, 8, 9-ம் வகுப்புக்கு 4.5 கிலோ, 10-ம் வகுப்புக்கு புத்தக பையின் சுமை 5 கிலோவை தாண்டக்கூடாது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory